பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய கம்பீர், “பாகிஸ்தான் தங்கள் செயல்களில் மாற்றம் செய்யும் வரை, அவர்கள் எதிராக எந்த வித கிரிக்கெட் போட்டியும் நடத்தக் கூடாது என்பதுதான் என் விருப்பம். ஆனால், இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

இறுதி முடிவை எடுக்கவேண்டியது பிசிசிஐ மற்றும் மத்திய அரசே,” என தெரிவித்துள்ளார். மேலும், “கிரிக்கெட்டையும் சினிமாவையும் விட, என் நாட்டின் மக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் உயிர் எனக்குப் பிரதானம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடக்கூடாது என சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.