தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பகுதியில் அமைந்துள்ளது பிரம்ம சிரகண்டீஸ்வர் ஆலயம். இந்த இடத்தில் தான் ஐந்து முகம் கொண்டு ஆணவத்துடன் இருந்த பிரம்மாவின் ஒரு தலையை கொய்து சிவபெருமான் அவரை நான்முகனாக மாற்றினார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு பிரம்ம சிவனை நோக்கி இங்குதான் தவமிருந்தார். இந்த ஆலயத்தில் மனைவி சரஸ்வதி தேவியுடன் பிரம்மா காட்சி தருகின்றார்.

பிரம்மாவின் பாதத்தில் ஜாதகங்களை வைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷங்களும் நீங்குவதாக கூறப்படுகிறது. சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் நேற்று ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மங்களாம்பிகை, பிரம்ம சரஸ்வதி, துர்க்கை அம்மன், காளியம்மன் ஆகியோருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.