கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்த தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சுங்க துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாய் விமானத்தில் வந்த பயணி சுகைப் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால் அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்து பார்த்தபோது அவர் கொண்டு வந்த லுங்கிகள் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அதனை ரசாயன சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது அது தங்கத்தால் தோய்க்கப்பட்ட லுங்கிகள் என்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கொண்டு வந்த 10 லுங்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. லுங்கியிலிருந்து தங்கத்தை பிரித்துப் பார்த்தால் தான் எவ்வளவு தங்கம் என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் சுகைப் கைது செய்யப்பட்டுள்ளார்.