
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொடுத்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கண்டிப்பாக அமித்ஷா பதவி விலக வேண்டும். பாஜக வளர தொடங்கிய பிறகு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிரச்சனைகள் என்பது தொடங்கியுள்ளது. அவர்களின் வகுப்புவாத அரசியல் இந்துக்களையும் முஸ்லிம்களையும் விரோதிகளாக மாற்றி வருகிறது என்றார்.

அதன் பிறகு தொடர்ந்து பேசிய திருமா பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார். அதாவது காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்லாமல் பீகார் மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார் என்றார். காஷ்மீர் தாக்குதலை பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரமாக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக திருமா விமர்சித்தார். மேலும் பீகார் சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரமாக இதனை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவது கசப்படுகிறது என்றும் கூறினார்.