நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாகவும், பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வந்தே பாரத் விரைவு ரயில் வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தால் ரயில் பெட்டிகள் அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீல நிறத்தில் உள்ள வந்தே பாரத் ரயில் அதே நிறத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. காவி நிறம் மாற்றப்பட்ட வந்தே பாரத் ரயிலை, ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இன்று பார்வையிட்டுள்ளார். வந்தே பாரத் ரயில்கள் காவி நிறத்திற்கு மாற்றப்படுவதற்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.