இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சரவை சமூக ஊடகங்கள் ,ஆன்லைன் விற்பனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களை பயன்படுத்துவர்களுடைய தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதற்காக டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா என்று ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் மூலமாக பயனாளிகள் உடைய தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் நிறுவனங்கள் அவற்றை சேமிக்கும் முறைகள், பயன்படுத்தும் முறைகள், டேட்டா திருட்டை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், பயனாளிகளின் உரிமைகளை நிர்ணயம் செய்யப்படுகிறது

ஒவ்வொரு முறையும் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேகரிக்க நிறுவனம் முன் அனுமதி பெறுவது கட்டாயம். அதோடு மட்டுமல்லாமல் 18 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பயனர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும் அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியம் ஆக்கப்பட்டுள்ளது