நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் தங்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு  சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை சமீபத்தில் அறிவித்தார். அதன்படி 1560 அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும் அவர்களுக்கு நோய் அறிதல் மற்றும் பயிற்சி மூலம் இலவச சிகிச்சை அளிப்பதற்கு 50,000 ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுவரை இவர்களுக்கு சம்பளமாக 4500 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு 9750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதத்திற்கான செல்போன் கட்டணமும் அரசால் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார பணியாளர்கள் மகிழ்ச்ச்சியடைந்துள்ளனர்.