
இந்திய அரசின் பிரசார் பாரதி அமைப்பின் கீழ் இயங்கும் தூர்தர்சன் தொலைக்காட்சியின் லோகோ காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது சர்ச்சையாகியுள்ள நிலையில் அத குறித்து தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்கத்தில், காவி என்பது தியாகத்தின் வண்ணம், நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி, அந்த வண்ணத்தில் அரசு தொலைக்காட்சி லோகோவை மாற்றுவதில் தவறில்லையே என்று பதிவிட்டுள்ளார்.