மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் தவிர, நீல அட்டைகளும் கால்பந்து விளையாட்டுகளில் கொண்டு வரப்படுகின்றன. சர்வதேச கால்பந்து சம்மேளன வாரியத்தால் சோதனை அடிப்படையில் நீல அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 1970 உலகக் கோப்பையில் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் வந்த பிறகு புதிய அட்டை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

போட்டியில் தவறு செய்ததற்காக ஒரு வீரருக்கு நீல அட்டை காட்டப்பட்டால், அந்த வீரர் 10 நிமிடங்களுக்கு மைதானத்திற்கு வெளியே இருப்பார். ஒரு போட்டியில் இரண்டு நீல அட்டைகளைப் பெற்றால், சிவப்பு அட்டை வழங்கி விலக்கப்படுவார்.
ஒரு நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தைப் பெற்றாலும் சிவப்பு அட்டை வழங்கப்படும்.