
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தனியார் மது கடைகளை காலை 8 மணிக்கு திறந்து வைத்து மது விற்பனை செய்கிறார்கள். இதனை கனகராஜ் தட்டி கேட்ட நிலையில் ஊடகங்களின் முன்னிலையில் அதனை அம்பலப்படுத்தியதற்காக அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அவசரமாக கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக அரசு மக்களுக்கான செயல்படுவதற்கு பதிலாக சாராய வியாபாரிகளுக்கு அரணாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவின் ஒரு பிரிவு போல் தமிழக காவல்துறை செயல்படாமல் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் கனகராஜை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.