கடந்த மாதம் முதல் பூண்டு விலை கிடு கிடு என உயர்ந்து கிலோ ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. வேலூர் மார்க்கெட்டிற்கு எப்போதும் பூண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தான் வரும். ஆனால் அங்கு விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்தது.

இதனால் பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் அங்கு விளைச்சல் சீரடைந்துள்ள நிலையில் விலை குறைந்து வருகிறது. தற்போது வேலூரில் ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பிறபகுதிகளிலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.