தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தனது எக்ஸ் (X) தளப் பதிவில், “கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்கவைப்பதில் மட்டுமே முதலமைச்சர் முழு கவனத்தையும் செலுத்துகிறார்; தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு எங்கே?” எனத் தமிழக அரசை நோக்கி அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய திமுக அரசு, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிவிட்டதாகவும், தோல்வி அடைந்த இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்திருப்பதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

“>

2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய்யின் இந்தத் தொடர் அரசியல் விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.