கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தனியார் தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட அந்த பாய்லர் வெடித்து சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

சுமார் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து சிதறியதால் அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்துள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி மயக்க பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திடீரென ரசாயன நீர் புகுந்ததால் இதனை கண்டித்து கடலூர் சிதம்பரம் சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.