கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது மாணவன் ஒருவன் கல்லூரி பேருந்தை பிடிப்பதற்காக அவசரமாக சாலையை கடந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த ஒரு அரசு பேருந்து மாணவன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாணவன் பலத்த காயம் அடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.