தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் தற்போது புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.