காமெடி நடிகர் கூல் சுரேஷ் சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் புது படங்கள் வெளியானால் தியேட்டருக்கே சென்று அந்த படம் குறித்து விமர்சனங்களை முன்வைப்பர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில், தன்னிடம் கார் இல்லாததால், சூட்டிங்கிற்கு ஆட்டோவில் செல்வதாகக் கூறியிருந்தார்.

இதைக்கேட்ட சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்செல்வன், கூல் சுரேஷுக்கு கார் பரிசளித்துள்ளார். அதை பெற்றுக் கொண்ட கூல் சுரேஷ், மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து பிரபலமானவர் கூல் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது