சீன நாட்டின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஜாங் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் தன்னுடைய 8 வயது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஒரு இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சிறுவன் தன் தாயிடம் மீண்டும் வீட்டிற்கு போக வேண்டாம் எனக்கு அங்கு செல்ல விருப்பமில்லை என்று கூறியுள்ளான். அவனை சமாதானப்படுத்தி தன்னுடைய வழிக்கு கொண்டு வர ஜாங் மிகவும் முயற்சி செய்தார். ஆனால் சிறுவன் சொல்பேச்சை கேட்காததோடு ஒரு கட்டத்தில் காரில் இருந்து குதித்து விடுவேன் என தன் தாயை மிரட்டினான்.

இதனால் காரை பாதுகாப்பாக ஓட்ட முடியாது என்பதை ஜாங் உணர்ந்ததால் நெடுஞ்சாலையில் ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு தன்னுடைய மகனை வலுக்கட்டாயமாக காரில் இருந்து கீழே  இறக்கினார். பின்னர் ஒரு குச்சியை எடுத்து தன்னுடைய மகனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு அடித்தார். அந்த சிறுவன் வலி பொறுக்க முடியாமல் அலறினான். இது பற்றி அந்தப் பெண் கூறும்போது இதுபோன்று  சாலையில் காரை நிறுத்திவிட்டு மகனை அடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்பது எனக்கு தெரியும். ஆனால் என் மகனை வழிக்கு  கொண்டு வர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

இப்படி அடித்தால் தான் சரிப்பட்டு வருவான் என்று கூறினார் . இதற்காக அந்த பெண்ணுக்கு 2400 இந்திய மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தன் தவறை உணர்ந்த சிறுவன் இனி இப்படி செய்ய மாட்டேன் எனவும் நான் இப்படி செய்தால் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இது தவறான உதாரணமாக அமையும் என்பதால் நான் செய்த செயலுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறுகிறான். இது தொடர்பான வீடியோவை ஜாங் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.