நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகள் ஆய்வுகளின் போது போலியான தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று மற்றும் வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய மருந்துகளான காய்ச்சல் மற்றும் சளி மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.