
மதுரையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எந்த ஒரு விமர்சனத்திற்கும் எல்லை வேண்டும் என்று கூறிய அண்ணாமலை தற்போது திராவிட கட்சிகளை புகழ்ந்து பேசி உள்ளார். இதன் மூலம் அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனம் ஆகிவிட்டது. அவர் காமெடி செய்வது போல் நடந்து கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதில் வழங்கியவர் அரை வேக் காட்டுத்தனமாக பேசுகிறார். தமிழகத்தில் திமுகவை தவிர வேறு எந்த ஒரு கட்சியும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் பயத்தின் காரணமாகத்தான் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து விழா நடத்தியுள்ளார். விஜய் இன்னும் அரசியல் களத்திற்குள் வரவில்லை. ஒரு இளைஞர் அரசியலுக்குள் வருவதை தடுக்க திமுக முயற்சிக்கிறது. மேலும் விஜய் நடித்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.