
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. அதன் பிறகு சூர்யா, விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வரும் காந்தாரி படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது காந்தாரி படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் காந்தாரி படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Gandhari coming to theatres this JULY – @ihansika a horror thriller!
A film by @Dir_kannanR.
Here’s the making video 🎥 https://t.co/OlHxcigsVB@actor_shirish @Dhananjayang @balasubramaniem @E5ntertainment @kmspictures_ @LVMUTHUGANESH @silvastunt @iam_LVM @LVGANESAN…
— Rajasekar (@sekartweets) May 31, 2024