பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சோன்பூர் பகுதியில் சுனில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுனிலின் மனைவிக்கு அவரது அக்காவின் கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கள்ள விவகாரம் தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சுனிலுக்கு தெரிய வந்ததால் அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சுனிலை‌ அவரது மனைவியின் காதலர் 3 மாதங்களுக்கு முன்பாகவே தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அடித்து மிரட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

அதோடு அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்களும் விடுத்துள்ளார். ஆனாலும் அவர் தன் மனைவியின் கள்ள உறவை ஏற்காததால் அவரது மனைவி, மாமியார் அதாவது மனைவியின் அம்மா மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் சுனிலை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த 12 ஆம் தேதி சுனிலை திட்டமிட்டு தன் தாய் வீட்டிற்கு அவரது மனைவி அழைத்து சென்ற நிலையில் அங்கு சுனிலை மாமியார் மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சுனிலின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுனிலின் மனைவி மற்றும் மாமியாரை கைது செய்த நிலையில் காதலனை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.