உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது திடீரென கோபமடைந்த சிங்கங்கள் அவரை தாக்கியுள்ளது.

மேலும் உயிருடன் இருந்த ஐரிஸ்குளோவை சிங்கங்கள் கடித்து குதறி தின்றது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு மற்ற ஊழியர்கள் வந்த போது உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு தான் ஐரிஸ்குளோவ் சிங்கங்கள் தாக்கி உயிர் இழந்தது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.