
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் கூலி தொழிலாளி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக வேலை காரணமாக இந்த தம்பதியினர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வசித்து வருகின்றனர். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமிக்கு மார்க்கெட்டில் டிரைவராக வேலை பார்க்கும் யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மனைவி யுவராஜ் உடன் பேசாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
கடந்த பத்தாம் தேதி மாணவியின் தந்தை உறவினர் வீட்டு விசேஷத்திற்கும் தாய் வேலைக்கும் சென்றுவிட்டனர். இதன் மாணவி தனது தோழிகளை பார்க்க சொல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பேஸ்புக் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா என்பவர் மாணவி அறிமுகமானார்.
அவர் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்று பாலில் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. ஏற்கனவே யுவராஜ் கடந்த ஜூலை மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையை பயன்படுத்தி பலரும் சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் யுவராஜ், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா, இடுஹட்டியை சேர்ந்த பிரவீன், பிரேம்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.