கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கடைசி மகள் பவானி (19) 10-ம் வகுப்பு முடித்த நிலையில் அழகு கலை பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில் பவானி அவருடைய உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவருக்கு பெற்றோர் வேறொருவருடன் திருமண நிச்சயம் செய்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக பவானி  மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாததால் பவானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பெற்றோர் பவானி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பவானி இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக பவானியின் தாயார் இசக்கியம்மாள் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.