சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்று சொல்லும் நிலையில் அது ஒரு பயங்கரமான மிருகமாக இருக்கிறது. அதன் கர்ஜனை மற்றும் தோற்றத்தை பார்த்தாலே உடல் நடுங்க ஆரம்பித்து விடும். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஆடு மாடுகளை மேய்ப்பது போல் ஒருவர் சிங்கத்தை ஓட்டி செல்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Lalit Pratap Yadav (@l.p5890)

அதாவது கென்யாவில் உள்ள மசாய் மாரா காட்டில் ஒருவர் இரண்டு பார்பரி சிங்கங்களை சாதாரணமாக ஆடு மாடுகளை விரட்டுவது போல் ஒரு கைத்தடியை எடுத்து விரட்டுகிறார். அந்த மனிதனைப் பார்த்ததும் சிங்கங்கள் பயந்து ஓடுகிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஒருவர் சிங்கங்களை ஆடுகளைப் போல் மேய்க்கும் சகோதரர் என கமெண்ட் செய்துள்ளார். மேலும் இதே போன்று பலரும் நகைச்சுவையான பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.