இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் ஆதரவாக இருக்கிறது. இதனிடையே காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரெ குர்லாய் என்பவர் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லாமல் இருக்கலாம் ஆனால் அமெரிக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம். காலம் இதற்கு பதில் சொல்லும் என கூறியுள்ளார்.