உத்தரப்பிரதேச மாநில காவல் துறையைச் சேர்ந்த சந்தீப் சர்மா என்ற துணை ஆய்வாளர் மேடையில் ஆடிய அதிரடியான நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனங்களை வென்று வருகிறது. உத்தரப்பிரதேச ஆயுதப்படை நிறுவன தின விழாவின் போது, ‘பாக் மில்கா பாக்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘ஹவன் கரங்கே’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் சீருடை பணியில் இருந்தாலும், தனது கலை ஆர்வத்தை கைவிடாமல் அவர் வெளிப்படுத்திய விதம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 38 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சாதாரண பனியன் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்து, பாடலின் ஒவ்வொரு துடிப்புக்கும் ஏற்ப அவர் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க அசைவுகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sandeep Sharma (@supercop_sharma)

“>

இந்நிலையில் “காவல்துறையில் இருந்தாலும் இவ்வளவு திறமையையும், மகிழ்ச்சியையும் தக்கவைத்துக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உயர் அதிகாரிகள் முதல் சாமானிய மக்கள் வரை பலரும் சந்தீப் சர்மாவின் இந்த உற்சாகமான கலைத் திறனை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.