
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். அதன்பிறகு இந்த படத்தில் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒட்டி கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தற்போது படக்குழுவினர் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இன்னும் 100 நாட்கள் தான் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளது.
100 days to go for the King’s arrival 👑
Brace yourselves 🔥
For #Kanguva 🦅#KanguvaFromOct10 🗡️@Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations @KvnProductions @PenMovies #PenMarudhar… pic.twitter.com/3g2C0WaJ9L— Studio Green (@StudioGreen2) July 2, 2024