தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன பிரேமம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் டில்லு ஸ்கொயர் திரைப்படம் வெளியான நிலையில் அதில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். அதாவது சினிமாவிற்கு வந்த காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அனுபமா கூறினார்.

ஆனால் டில்லு ஸ்கொயர் படத்தில் நெருக்கமான காட்சிகளிலும் கவர்ச்சி காட்சிகளிலும்  நடித்திருப்பார். இதற்காக அவர் பல விமர்சனங்களை சந்தித்த நிலையில் முன்பு போதிய அனுபவம் இல்லாததால் அப்படி கூறியதாகவும் தற்போது படத்திற்கு தேவைப்படுவதால் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதாகவும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். மேலும் அந்த வகையில் தற்போது சேலையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.