மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சீனிவாசன் குரு தூரி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் சீனிவாசன் சம்பவ நாளில் அடல் சேது பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை நிறுத்திய அவர் கீழே இறங்கினார். அதன்பின் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் குதித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம்  தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் அவருடைய உடல் இன்னும் மீட்கப்படவில்லை. தொடர்ந்து தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.