தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்து செல்வதற்கு கழிவு நீர் வாகனங்கள் ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கழிவுநீர் ஊர்தி என்பதற்கு பதிலாக கழிவுநீர் அகற்றும் வாகனம் என்றே குறிப்பிட வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கழிவு நீர் வாகனங்களை பதிவுப் புத்தகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பதிவு செய்யாதவர்களின் வாகன அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.