உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த குடியிருப்புக்கு சொந்தக்காரர் தேவேந்திரன். நேற்று முன்தினம் காலை கழிவறை குழாய் கழன்று விழுந்ததாகவும், அதன் உள்ளே கரு சிக்கியிருந்ததை பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்ததாகவும் தேவேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அந்த குடியிருப்பில் உள்ள வீடுகளில் 9 பேர் வாடகைக்கு குடியிருக்கின்றனர். அங்கு வசிக்கும் 9 வீட்டாரின் டிஎன்ஏ மற்றும் ஓனர் தேவேந்திரன் டிஎன்ஏ, கருவில் இருக்கும் டிஎன்ஏ உடன் ஒப்பீடு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர். குழாயிலிருந்து மீட்கப்பட்ட ஆறு மாத கரு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.