உத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கெசர்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனக்கு திருமணமான நிலையிலும் வேறொரு வாலிபருடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் போது அதனை உறவினர்கள் பார்த்து விட்டனர். அதன் பின் அவர்கள் இருவரையும் ஒரு கயிறில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் அடித்து தாக்குகிறார்கள். அவர்களை தெருவில் கயிறால்  கட்டி வைத்த நிலையில் அந்த ஆணை அவருடைய மனைவியும் அந்த பெண்ணை அவருடைய கணவனும் அடிக்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கள்ளத்தொடர்பில் இருந்தாலும் இப்படி பொதுவெளியில் முரட்டுத்தனமாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் வீடியோவை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.