
முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் அவர்கள், கலைஞர் அவர்களின் கல்லக்குடி போராட்டம் மிக முக்கியமான போராட்டம். 14 வயதில் வந்த இளைஞன் தெருவில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார் என்றால், 14 வயசு பையனுக்கு எதிர்காலத்தில் முதல்வர் ஆவோம் என்று தெரிந்திருந்து வந்து நின்றானா? 14 வயசு பையன் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கடைசி மூச்சு இருக்கும் வரை சமூகத்திற்கும் சமூக நீதிக்கும் பாடுபட்டு போராடியிருக்கிறார் என்றால் பெரியார் கொள்கை, அண்ணா கொள்கை சேர்த்து அதை யார் வந்தாலும் உடைக்க முடியாத அளவுக்கு செய்திருக்கிறார் கலைஞர். இதை மாற்றவும் முடியாது அளிக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.