உலக அளவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தி மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்க பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு சில சலுகைகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சரியான வயதில் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பணப் பரிசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக 25 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்யும் இளம் பெண்களுக்கு பத்தாயிரம் யுவான் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 11 ஆயிரத்து 500 வழங்கப்படும் என சாங்ஷான் கவுண்ட்டி அரசு அறிவித்துள்ளது.