சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இன்று தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், ரசிகர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்போது வரை சினிமா துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் ஆரம்ப கால கட்டத்தில் பல தடைகளையும் தோல்விகளையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தன் ஆற்றல்மிகு நடிப்பு திறமையால் உலகெங்கும் வாழும் திரையரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினி சாரின் கலையுலக பயணம் இன்று போல் என்றும் நம் எல்லோரையும் மகிழ்விக்கட்டும். நல்ல உடல் நலத்துடன் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.