சென்னை, கிண்டியில் திரைத்துறையினர் சார்பில் ‘கலைஞர் 100’ விழா நடைபெற்றது. திரைத்துறையை சார்ந்த் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ஆனால் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் விஜய் வராதது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. வழக்கமாக அஜித்தான் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவார். ஆனால் இந்த முறை விஜய் வருவதை தவிர்த்திருப்பதற்கு காரணம் அவருடைய அரசியல் நிலைபாடுதான் என்று சொல்லப்படுகிறது. விரைவில் புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கும் விஜய் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டால் திமுக சாயம் வரும் என்று எண்ணுகின்றாராம்.