இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகளைப் பற்றி பேசியுள்ளார். ஆனந்த விகடன் இதழுக்கு கலைஞர் அளித்த பேட்டியில், “அரசியல் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம் என்ன?” என்ற கேள்விக்கு, “ஒரு சமூகத்துக்கு அல்லது மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்து, அவர்கள் நமக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நன்றி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நல்லதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்று கருணாநிதி கூறியதை அவர் நினைவுகூர்கிறார். இது அரசியல் மற்றும் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம் என்று இளைஞர் விளக்குகிறார்.
தனது சொந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். பிராமண சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பதால் கிடைக்க வேண்டிய அரசு உதவி கிடைக்காது என்று குடும்பத்தினர் கூறினர். ஆனால் கலைஞர் ஆட்சியில் அந்த உதவி கிடைத்தது. 80,0000 ரூபாய் கொடுத்தார் சொந்தக்காரன் கூட தரமாட்டான். இருந்தும் குடும்பத்தினர் அவருக்கு வாக்களிக்கவில்லை, இன்றும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். “இவ்வளவு உதவி செய்தும் எப்படி விசுவாசம் இல்லாமல் இருக்க முடியும்? எத்தனை சமூகங்களுக்கு அவர் நல்லது செய்திருப்பார், ஆனால் அவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள்” என்று கூறி வருத்தப்படுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
