கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக DGP சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் மகளிர் உரிமை தொகை ரூ.1000க்கான விண்ணப்பங்களை நேற்று முதல் 4ம் தேதிவரை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யவுள்ளனர்.

குறிப்பாக, டோக்கன் விநியோகம் செய்யும்போது, இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்பம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்போர் விவரங்களை குறித்து வைக்கவும், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 60% விண்ணப்பம், டோக்கன் விநியோகம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமை தொகை வழங்குவது குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் DGP எச்சரித்துள்ளார்.