கறந்த பசும்பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. உலகம் முழுவதும் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இது மனிதர்களை எளிதாக தாக்கும் என்றும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்படலாம் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதனால் கறந்த பாலை குடிக்க வேண்டாம் என்றும் பாக்டீரியாக்கள் சுத்திகரிப்பு செய்த பாலை அருந்துவதே சிறந்தது என்றும் உலக சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.