கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்குதிட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் இருந்த நிலையில் இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக நீதிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் நீதிகா தற்போது 3 மாதா கர்ப்பிணி ஆக இருக்கும் நிலையில், ஓடக்கா நல்லூர் பகுதியில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் மனைவியை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் தன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இவர் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு தென்னை மரத்தில் தன் மனைவிக்காக இளநீர் பறிக்க ஏறினார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு மின் ஒயரில் தவறுதலாக அவர் சிக்கிய நிலையில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு ஆனந்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.