
மத்திய மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கண்டு பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசானது மாத்ரு வந்தனாயோஜனா என்ற திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்கி வருகிறது. அதாவது இந்த திட்டத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு 5000 ரூபாயும், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் 6000 ரூபாயும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறையால் தொடங்கப்பட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்றால், கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், பொருளாதார பிரச்சினை காரணமாக கர்ப்ப காலத்தில் வேலைக்கு செல்ல முடியாதவர்கள். கர்ப்பகாலத்தில் சத்தான உணவில்லாமல் சிரமப்படுபவர்கள் உள்ளிட்ட பலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்திற்கு விருப்பம் உள்ளவர்கள் https://pmmvy.wcd.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.