கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், பரிசு, மதுபானங்களின் மதிப்பு சுமார் 265 கோடியை தாண்டியுள்ளது. மேலும், பறிமுதல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை 2036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.