பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மே 3, 13, 20, 27 ஆகிய தேதிகளில் பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூருவில் காலை 7.50க்கு புறப்பட்டு இரவு 8.30க்கு வேளாங்கண்ணி சென்றடையும். வேளாங்கண்ணியில் இரவு 11.55க்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30க்கு பெங்களூரு சென்றடையும். அதேபோல், ஏப்.26, 28ல் கரூர்-திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் ரத்து செய்யப்படும்.