தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கரும்புச்சாறு கடை ஒன்றில் வைத்துள்ள பேனர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது அந்த பேனரில், கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை, சம்பளம் 18,000 ரூபாய் , வேலை நேரம் காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை என எழுதப்பட்டுள்ளது.

கல்வி தகுதி BE, BA, BSC என்றும் வயது வரம்பு 25 முதல் 40 வயது வரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்பு கொள்வதற்கு கடை உரிமையாளர் தன்னுடைய தொடர்பு எண்ணையும் இதில் பதிவிட்டுள்ளார். இந்த பேனர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.