
அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. பாஜக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதக்கம் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
அதிமுக தலைவர்கள் தான் அவர்களின் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியவர்கள். எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது கண்ணியமாகவும், நாகரிகமாகவும் இருக்காது என அதிமுக-பாஜக மீண்டும் கூட்டணி குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.