
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய 68-வது படமானது தி கோட் படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தன்னுடைய 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க இருக்கிறார் என்பதால் அவர் இதுவரை பணியாற்றாத இயக்குனருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் பலரும் விரும்புகிறார்கள்.
குறிப்பாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி நடிகர் விஜய் பற்றி பேசிய ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகர் ரஜினிகாந்தை வைத்து சுந்தர்சி அருணாச்சலம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை நவீன காலகட்டத்திற்கு ஏற்றார் போன்று எடுத்தால் யாரை நடிக்க வைப்பீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் நடிகர் விஜயின் பெயரை கூறினார். அப்போது சூப்பர் ஸ்டார். இப்போது தளபதி விஜய். எனவே நடிகர் விஜயைதான் கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என்று கூறினார். மேலும் அவர் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.