கொல்கத்தாவில் டோலிகஞ்ச் சென்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 13ஆம் தேதி ஒரு பெண்ணின் தலை மட்டும் துண்டாக தனியாக கிடந்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பெண்ணின் தலையை கைப்பற்றிய நிலையில் பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் அந்த பெண்ணின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் குற்றவாளி பிடிபட்டார். அதாவது அட்டியூர் ரஹ்மான் லஸ்கர் என்ற 35 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்தியதில் கொலை செய்யப்பட்ட பெண் அவருடைய சகோதரரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. அதாவது அந்த பெண் தன்னுடைய கணவனை பிரிந்து  தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அவர் வீட்டு வேலை செய்து வந்த நிலையில் தினமும் லஸ்கர் உடன் வேலைக்கு சென்றுள்ளார். இதில் லஸ்கருக்கு அவரின் மீது ஆசை வந்த நிலையில் அதை பெண்ணிடம் கூற அவரோ ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டார். அதன் பிறகு லஸ்கர் உடன் பேசுவதை தவிர்த்த நிலையில் செல்போன் நம்பரையும் பிளாக் செய்து விட்டார். கடந்த வியாழக்கிழமை அந்த பெண் வேலை முடிந்து கிளம்பிய போது தன்னுடன் வருமாறு லஸ்கர் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளார். பின்னர் கட்டுமான பணிகள் நடைபெறும் ஒரு இடத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்த தலையை அறுத்து வீசி உள்ளார். பின்னர் உடலை 3 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.