ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கான  சிறப்புத் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சம்பை சோரன் அறிவித்துள்ளார்.

அத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் ஜார்கண்ட் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வரி செலுத்துவோர் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.