மத்திய பிரதேஷ் மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவர் 2019 ஆம் ஆண்டு ஜெயா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் ஜெயாவின் உடல் நிலையை காரணமாக கூறி 2021 ஆம் ஆண்டு மான்சி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு ராம்பாபு இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் அக்டோபர் 31 தீபாவளி அன்று இரண்டு பெண்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த மான்சி ஜெயாவை 50 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த ஜெயாவை தொடர்ந்து காலால் எட்டி உதைத்துள்ளார் மான்சி. இதனைத் தொடர்ந்து ஜெயா மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மான்சியை கைது செய்துள்ளனர்.